Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ1 கோடி செலவில் பெங்களூரில் 5 புதிய பூங்கா

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ1 கோடி செலவில் பெங்களூரில் 5 புதிய பூங்கா

பெங்களூர், அக். 19: பெங்களூர் மாநகரில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தலா 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ1 கோடி செலவில் 5 புதிய ட்ரி பார்க் (மர பூங்காக்கள்) அமைக்க பெருமாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகரில் சுற்றுசூழலை பாதுகாக்கும் காக்கும் நோக்கத்தில் மாநகரில் புறநகர் பகுதியான தாசரஹள்ளி, ராஜராஜேஷ்வரிநகர், பொம்மனஹள்ளி, எலங்கா மற்றும் மகாதேவபுரா ஆகிய பகுதிகளில் தலா 2 ஏக்கர் நிலப்பரப்பில் மர பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்த பட்சம் 500 முதல் ஆயிரம் மர கன்றுகள் நடவும் தீர்மானித்துள்ளது. புதியதாக அமைக்கப்படும் மர பூங்காக்களில் விசாலமாக வளரும் ஆலமரம், அரசமரம், வேப்பம், புங்கை உள்பட பல தரமான மரங்கள் நடப்படுகிறது. ஒவ்வொரு பூங்காவிற்கும் தலா ரூ20 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூங்கா பராமரிப்பு பணியை மாநகராட்சியின் தோட்டக்கலை துறை மேற்கொள்கிறது. பொதுவாக மாநகரின் முக்கிய சாலைகளில் மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தினால், கேபில் பதிப்பு உள்பட பல பணிகளின் போது செடிகள் சேதமடைகிறது. புயல் காற்று வீசும் சமயத்தில் சாலையில் விழுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கத்தில் புறநகர் பகுதியில் மர பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.