Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்குடி நகராட்சி பூங்காவில் உருவாகும் புராண சிற்பங்கள் காரைக்குடி, அக். 20:காரைக்குடி

Print PDF

தினகரன் 20.10.2010

காரைக்குடி நகராட்சி பூங்காவில் உருவாகும் புராண சிற்பங்கள் காரைக்குடி, அக். 20:காரைக்குடி

நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் புராண பாத்திரங்களை சிற்பி ஒருவர் சிமென்ட் சிற்பங்களாக உருவாக்கி வருகிறார்.

காரைக்குடி நகராட்சி சார்பில் சுமார் 2 ஏக்கரில் புதிய பஸ்நிலையம் எதிரில் நவீன பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு சுமார் ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு செயற்கை நீர்வீழ்ச்சி, நவீன விளையாட்டு உபகரணங்கள், குழந்தைகள் விளையாட்டு தளம், நடைமேடை உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் கனியாமூரைச் சேர்ந்த சிமென்ட் சிற்பி ஜோசப்குழந்தையின் கலைநயத்தில் பூங்காவில் பல்வேறு வித்தியாசமான சிலைகள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத வகையில் புராணத்தில் வரக்கூடிய மச்ச, சிம்ம, கருட, ரிஷபம் உட்பட தசாவதாரங்களை சிற்பமாக செய்து வருகிறார். நார்னியா திரைப்படத்தில் காதாபாத்திரங்களாக வந்த ஓற்றைகொம்பு குதிரை, கடல்கன்னி உட்பட பல்வேறு சிலைகள் குழந்தைகள் பார்த்து வியக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன.

சிற்பி ஜோசப்குழந்தை கூறுகையில், ‘சிற்பகலையில் 4வது தலைமுறையாக ஈடுபட்டு வருகிறேன். டைனோசர் உருவம் குறித்து யாரும் அறியாத நிலையில் மதுரை ராஜாஜி பூங்காவில் முதன் முதலாக பெரிய அளவிலான டைனோசர் பொம்மை உருவாக்கப்பட்டது. அதேபோல் வேளாங்கண்ணி மாதா கோவில், பூண்டி மாதா கோவில், கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, டெல்லி தாமரைகோவில் உட்பட கனடா, சவுதி, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு இடங்களில் பூங்காக்களில் சிற்பங்கள் வடிவமைத்துள்ளேன். காரைக்குடியில் அமைக்கப்படும் பூங்காவிலும் புராண சிற்பங்கள் வடிவமைக்கப்படுகிறதுஎன்றார்.

 

 காரைக்குடி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் ஒற்றைகொம்புள்ள குதிரைக்கு சிற்பி ஜோசப் குழந்தை இறுதி வடிவம் கொடுக்கிறார்.