Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறிச்சி நகராட்சியில் கொசு ஒழிப்பு வாகனம்

Print PDF

தினமலர் 22.10.2010

குறிச்சி நகராட்சியில் கொசு ஒழிப்பு வாகனம்

குறிச்சி : குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், கொசு ஒழிக்க மருந்து தெளிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனம், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று இயக்கப்பட்டது. போத்தனூரிலுள்ள குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் பிரபாகரன் வாகனத்தின் சாவியை சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரிடம் ஒப்படைத்து, பயன்பாட் டினை துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஹனீபா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி தலைவர் பிரபாகரன் கூறியதாவது: பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த, 8.8 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்து தெளிப்பு இயந்திர வாகனம் வாங்கப் பட்டுள்ளது. நாள்தோறும் மூன்று முதல் நான்கு வார்டுகளில் மருந்து தெளிக்கும் பணி நடக்கும். சாக் கடை நீர் கால்வாய்களில் போடப் படும் பிளாஸ்டிக் கவர்களால், கழிவுநீர் செல்லாமல் தேங்கிவிடுகிறது. கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. அதுபோல, குப்பை மற்றும் கழிவுகளையும் சாக்கடையில் போடக்கூடாது.அனைத்து வார்டுகளிலும், வீடுகளிலிருந்து குப்பைகள் சேகரிக்க கைவண்டியுடன் துப்புரவு பணியாளர்கள் வருகின்றனர். கழிவுகளை சேகரித்து வைத்து, அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

8.64 லட்சம் ரூபாயில், 18 கன்டெய்னர்கள் செய்யப்பட் டுள்ளன. இவை, அனைத்து வார்டுகளிலும் அதிகளவு குப்பை சேரும் பகுதிகளில் வைக்கப்படும். பொதுமக்கள், தங்களது வீடுகளின் முன் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம், கொசு உற்பத்தியை தவிர்த்து, தொற்றுநோய் பரவுவதை தவிர்க்கலாம். சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்க, நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும். இவ்வாறு பிரபாகரன் தெரிவித்தார்.