Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ54 லட்சத்தில் பணிகள் உப்பிடமங்கலத்தில் நிறைவேற்றம்

Print PDF

தினகரன்                  29.10.2010

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ54 லட்சத்தில் பணிகள் உப்பிடமங்கலத்தில் நிறைவேற்றம்

கரூர், அக்.29: உப்பிடமங்கலம் பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ54 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் (2009&2010) ரூ10 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகக் கட்டடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் மனோகரன் வரவேற்றார். கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பேசுகையில், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் 2009&2010ம் ஆண்டில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் மொத்தம் 10 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ54 லட்சத்து 6 ஆயிரம். இத்திட்டத்தின்கீழ் 5வது வார்டு லட்சுமணம்பட்டியில் தார்சாலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிடமங்கலம் வாரச்சந்தையில் பஸ் நிறுத்தம் அருகில் ரூ13 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், பேரூராட்சி அலுவலகம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 7வது வார்டு புகையிலைகுறிச்சியானூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.76 லட்சம் மதிப்பில் சிமென்ட் தளம், 14வது வார்டு லிங்கத்தூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.34 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. உப்பிடமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ரூ.10லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

13வது வார்டில் உள்ள மயானத்தை ரூ.5லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 10வது வார்டு புதுக்கஞ்சமனூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ2.10லட்சத்தில் சிமென்ட் தளம் உள்ளிட்ட 10 பணிகள் ரூ54.6 லட்சத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்றார். விழாவில் தொலை பேசி ஆலாசனைக் குழு உறுப்பினர் நன்னியூர் ராஜேந்திரன், உப்பிடமங்கலம் பேரூராட்சித் தலைவர் ராஜலிங்கம், தாந்தோணி ஊரா ட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரகுநாதன், பேரூரா ட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் பெரியசாமி நன்றி கூறினார்.