Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி & அல்லிநகரம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பூமிபூஜையுடன் துவக்கம்

Print PDF

தினகரன்                09.11.2010

தேனி & அல்லிநகரம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பூமிபூஜையுடன் துவக்கம்

தேனி, நவ.9: தேனி கே.ஆர்.ஆர். நகரில் நடந்த இந்நிக ழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித் தார். பாதாள சாக்கடைக் கான குழாய் பதிப்பதற்கான குழிகள் தோண்டும் பணி துவங்கியது. நகராட்சித் தலைவர் பழனிச் சாமி, துணைத் தலைவர் இலங்கேசுவரன், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ரத்தினவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் குழந்தை வேலு பொறியாளர் ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெ க்டர் முத்துவீரன் நிருபர்களி டம் கூறியதாவது: தேனி& அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகரில் சாலைகள் மொத்தம் 78 கி.மீ நீளத்தில் உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேனி&அல்லிநகரம் நகராட்சியில் 85 ஆயிரத்து 724 பேர் உள்ள னர். தேனி& அல்லிநகரில் பாதாள சாக் கடைத் திட்ட த்தை நிறை வேற்ற கடந்த 2007ம் ஆண்டு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக் கல் நாட்டினார்.

அப்போது இதற்கு ரூ35 கோடி மதிப்பிடபட்டது. தற்போது, இத்திட்டப் பணிகள் ரூ38 கோடியே 66 லட் சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தமி ழக அரசு மானியமாக ரூ10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

நகராட்சி மற்றும் பொதுமக்கள பங்குத் தொகையாக ரூ13 கோடியே 29 லட்சம் மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி நிறு வன கடன் மூலம் ரூ11 கோடி யே 46 லட்சம் கடன் பெறு வது என முடிவு செய்யப்பட்டு இத்திட்டம் துவக்கப்படுகிறது. இந்த கடன் வட்டியாக ரூ 52 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. 33 வார்டுகளை 3 பகுதிகளாக பிரித்து இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 2009 ம் ஆண்டு 96 ஆயிரம் மக்கள்தொகை, வரும் 2024ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம், 2039 ம் ஆண்டு 1 லட்சத்து 51 ஆயிரம் என மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தேனி& அல்லிநகரில் 2 ஆயிரத்து 332 கழிவுநீர் சேகரிக்கும் ஆள் நுழைவுத் தொட்டிகள் அமைக்கப்படும்.

கே.ஆர்.ஆர். நகர், பங்களாமேடு பகுதிகளில் கழிவுநீரேற்று நிலையங்கள், கருவேல்நாயக்கன்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கப்படவுள்ளன. பாதாள சாக்கடை கட்டும் பணி கள் 2 ஆண்டுகளில் முடிவடை யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.