Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முக்கியமான ஸ்டேஷன்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலம்

Print PDF

தினகரன்                 16.11.2010

முக்கியமான ஸ்டேஷன்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலம்

மும்பை, நவ.16: ரயில் பயணிகள் தண்டவாளங்களின் குறுக்கே நடந்து செல்வதை தடுப்பதற்காக முக்கியமான ரயில் நிலையங்களில் 10 புதிய நடைபாதை மேம்பால ங்களை கட்ட மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தினசரி சுமார் 33 லட்சம் ரயில் பயணிகள் மத்திய ரயில்வே சர்வீஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தண்டவாளங்களை கடந்து செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரி ழக்கின்றனர். எனவே, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களில் ரூ.10 கோடி செலவில் 10 புதிய நடைபாதை மேம்பாலங்களை கட்ட மத்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

பரேல், வித்யவிஹார், திலக் நகர், கல்வா, திவா, அம்பர்நாத், பன்வேல், கோபர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தானே ரயில் நிலையத்தில் கூடுதலாக இரண்டு நடைபாதை மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு மேம்பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் தற்போதுள்ள நடைபாதை மேம்பாலங்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து தானேயில் புதிதாக இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

ரயில் நிலையங்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலங்களை கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் அடுத்த ஆண்டில் இந்த பாலங்கள் தயாராகி விடும் என்றும் அதிகாரிகள் கூறினர். ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வரும் பயணிகள் கூட்டம் சிரமமின்றி பல்வேறு சாலைகளுக்கும் பிரிந்து செல்வதற்கு வசதியாக மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஏராளமான ஆகாய நடைபாதைகளை கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.