Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தானேயில் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 16.11.2010

தானேயில் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறப்பு

தானே, நவ. 16: தானேயில் கட்டப்பட்டு வரும் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது. தானேயில் வாகன போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக நிதின் சந்திப்பு பகுதி விளங்குகிறது. இதனால் இங்கு பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இங்கு மாநகராட்சி சார்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்தப் பணி நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. இது பற்றி தானே மாநகராட்சி இன்ஜினியர் கே.டி.லாலா கூறியதாவது:

சுரங்கப் பாதையில் இன்னும் 17 மீட்டர் அளவுக்கே பணிகளை முடிக்க வேண்டிய பாக்கியுள்ளது. இந்த பணி நடப்பு மாத இறுதியில் முடிந்து விடும். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சுரங்கப் பாதைகள் போல் இல்லாமல் இந்த சுரங்கப்பாதை நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு செல்ல இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் விளம்பரங்களையும் இந்த சுரங்கப்பாதையில் செய்து கொள்ளலாம். சுமார் 4.5 கோடி செலவில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதை திறக்கப்பட்டதும் பாதசாரிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்