Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ209.22 கோடி பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் ஆய்வு

Print PDF

தினகரன்                18.11.2010

ரூ209.22 கோடி பாதாள சாக்கடை திட்டப்பணி கலெக்டர் ஆய்வு

ஈரோடு, நவ.18: ஈரோடு மாநகராட்சி சார்பில் ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சவுண்டையா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணை த்து ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

5 பேக்கேஜ்களாக நடைபெறும் இந்த கட்டுமான பணிகளில் தற்போது பேக்கேஜ் 1 மற்றும் பேக்கேஜ் 3 ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெ க்டர் சவுண்டையா ஆய்வு மேற்கொண்டார். மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கட்டுமான பணிகள் குறி த்து கேட்டறிந்தார். ஆழ் துழை குழாய் அமைக்கும் இடத்தில் குழாய்களின் நீள, அகலங்கள் குறித்தும், தரமாக கட்டப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் மல்லிகை நகரில் பம்பிங் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். பெரியார் நகர் ராஜா கார்டன் பகுதியில் பேக்கேஜ் 1 பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் மந்தமாக நடந்து வந்தது. இதுகுறித்து காண்ட்ராக்டரிடம் விசாரித்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தினசரி எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள், எவ்வளவு பணிகள் செய்யப்படுகிறது என்பது குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டார்.

பின்னர் மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காந்திஜி ரோடு மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்தார். அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் அங்கு புதியதாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு கலெக்டர் சவுண்டையா பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 1 மற்றும் 3 ஆகிய இரண்டு பிரிவு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

3வது பேக்கேஜ் வேகமாக பணிகள் நடந்து வருகிறது. 1வது பேக்கேஜ் பணிகள் பல மாதங்கள் ஆகியும் இன்னும் சரியாக நடைபெறவில்லை. அதிக ஆட்களை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மற்ற 3 பிரிவுகளுக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2012 மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தோண்டப்பட்ட குழிகளை மூடுவது குறித்து அரசிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். 80 அடி ரோடு திட்டம் குறித்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை யாணை பெற்றுள்ளார்கள். இதுதொடர்பாகவும் அர சிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் வடிவேல், பாதாள சாக்கடை திட்ட பொறி யாளர் ஞானமணி, செயற்பொறியாளர்கள் முருகானந்தம், சுகந்தி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.