Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாளச் சாக்கடை திட்டம் துரிதப்படுத்த ஆலோசனை

Print PDF

தினமலர்              20.11.2010

பாதாளச்  சாக்கடை திட்டம் துரிதப்படுத்த ஆலோசனை

கோவை : பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், பாதாளச் சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது, பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து மேயர் வெங்கடாசலம் கூறியதாவது:பாதாளச் சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது மற்றும் துரிதப்படுத்துவது குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பாதாளச்சாக்கடை திட்டத்தில் உள்ள குறைகள், அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத விதத்தில் பணிகளை மேற்கொள்வது; அனைத்துப்பகுதிகளிலும் ஒரே சமயத்தில் பணிகளை மேற்கொண்டால், இடையூறு ஏற்படும் என்பதால், பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு இடமாக பணிகளைச் செய்வது; பணிகளை துவங்கி துரிதமாக முடிப்பதற்கான ஆயத்தம் செய்வது; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாதாளச்சாக்கடை கட்டுமானப் பணி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.குழி தோண்டும் போது, குவிக்கப்படும் மண்ணை, காலியாக உள்ள தனியார் "சைட்'களில் குவித்து வைத்து, "விரைவில் அப்புறப்படுத்தப்படும்' என தகவல் பலகையை அங்கு வைப்பது; சேறும் சகதியுமான இடங்களில், சேறை அப்புறப்படுத்திவிட்டு, கிணத்துமண் போட்டு சமப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றார்.