Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓட்டல் கழிவுகளை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

Print PDF

தினகரன்             06.12.2010

ஓட்டல் கழிவுகளை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை

நெல்லை, டிச.6: ஓட்டல்கள், லாட்ஜ்கள் தங்கள் சாக்கடை கழிவுகளை பாதாள சாக்கடையில் நேரடியாக இணைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பாதாள சாக்கடை, தனியார் நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்களை வைத்து அடைப்புகளை நீக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்கள் கட்டிட சாக்கடை இணைப்புகளை நேரடியாக பாதாள சாக்கடை மெயின் இணைப்பில் கொடுக்க கூடாது.

இந்த உரிமையாளர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில் டையாபிரம்சேம்பர்என்னும் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும். அதன் மூலம் பாதாள சாக்கடை மெயின் குழாயில் இணைப்பு கொடுக்க வேண்டும்.

15 தினங்களுக்குள் இதனை நிறைவேற்ற தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். பாதாள சாக்கடைக்கு இணைப்பு பெறாதவர்கள் இன்னும் 7 தினங்களுக்குள் கண்டிப்பாக விண்ணப்பித்து இணைப்பு பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.