Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி, 4 நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி தீவிரம் ரூ209.22 கோடி திட்டம் மூன்று ஆண்டில் முடியும்

Print PDF

தினகரன்               10.12.2010

மாநகராட்சி, 4 நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணி தீவிரம் ரூ209.22 கோடி திட்டம் மூன்று ஆண்டில் முடியும்

ஈரோடு, டிச.10: ஈரோடு மாநகராட்சியில் ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகளையும் இணைத்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடியும், ஜெர்மன் நிதி ஆதாரத்தில் கடனாக ரூ.71.14 கோடியும், மானியமாக ரூ.62.77 கோடியும், உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடியும், கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடியும் என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 5 சிப்பங்களாக பிரித்து இந்த பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது.

முதல் சிப்பத்தில் ஈரோடு மாநகராட்சியில் 14, 15, 23, 24, 25, 26, 27, 28, 37, 38, 39, 40 ஆகிய வார்டு பகுதிகளும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், சூரம்பட்டி நகராட்சியில் 1&வது வார்டு முதல் 18&வது வார்டு வரையும், காசிபாளையம் நகராட்சியில் 1, 2, 4 மற்றும் 21&வது வார்டு பகுதியும், 4, 5, 19, 20 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 17&வது வார்டு மற்றும் 12, 15, 16, 18 முதல் 21 வார்டு வரை ஒரு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சிப்பத்தில் ஈரோடு மாநகராட்சியில் 1&வது வார்டு முதல் 11&வது வார்டு வரையும், 16&வது வார்டு முதல் 20&வது வார்டு வரையும், 30&வது வார்டு முதல் 36&வது வார்டு வரையும், 41, 43, 44, 45 ஆகிய வார்டுகளும், 12, 13, 21, 22, 29, 42 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 2, 3, 4, 5 ஆகிய வார்டுகளும், 1&வது வார்டு, 6&வது வார்டு முதல் 9&வது வார்டு வரை ஒரு சில பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சிப்பத்தில் பெரியசேமுர் நகராட்சியில் 1&வது வார்டு முதல் 18&வது வார்டு வரையும், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 10, 11, 13 மற்றும் 14&வது வார்டு பகுதியும், 1, 6 முதல் 9&வது வார்டு வரை, 12, 15, 16, 18 முதல் 21&வது வார்டு வரை ஒரு சில பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காவது சிப்பத்தில் காசிபாளையம் நகராட்சியில் 6 முதல் 18 வார்டு வரையும், 4, 5, 19, 20 ஆகிய வார்டுகளில் ஒரு சில பகுதிகளும் பாதாள சாக்கடை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐந்தாவது சிப்பமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த பாதாள சாக்கடை திட்டம் 498.6 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலமாக கொண்டு வரப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க பீளமேடு என்ற இடத்தில் 18.27 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டு கழிவுநீரை சுத்தப்படுத்தி ஆற்றில் விடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை கட்டும் பணிகள் ஒவ்வொரு சிப்பமாக தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதாள சாக்கடை செல்லும் குழாய்கள் பதிக்க பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. குழாய்கள் அமைக்க ரோடுகளை தோண்டுவதால் கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையினால் ரோடுகள் மிக வும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை கட்டும் பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.