Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நகர்நல அமைப்பு வலியுறுத்தல்

Print PDF

தினமணி               10.12.2010

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நகர்நல அமைப்பு வலியுறுத்தல்

விருதுநகர், டிச. 9: விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்நல அமைப்புக் கூட்டத்திóல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் வியாபார சங்க அரங்கத்தில் நகர் நல அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்நல அமைப்பின் தலைவர் எம்.ரத்தினகுமார் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.

இக் கூட்டத்தில், விருதுநகரில் 2006-ல் துவங்கி 2008-ல் முடியும் என அறிவிக்கப்பட்ட பாதாளச் சாக்கடைப் பணி இன்று வரை முடிவு பெறாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

பாதாளச் சாக்கடைப் பணிகள் முறையாக நடைபெறாமல் கெüசிகா நதியில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கிறது என பலர் முறையிட்டதன் பேரில் இதுகுறித்து பொது நலன் வழக்கு தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்னைகளை ஆராய வார்டுகளில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்நல அமைப்பின் உறுப்பினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் மேனகைக் கண்ணன் நன்றி கூறினார்.