Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளை அகற்ற 24 புதிய வாகனங்கள்

Print PDF

தினமணி       13.07.2012

குப்பைகளை அகற்ற 24 புதிய வாகனங்கள்


புதிதாக வாங்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்களின் சாவியை ஓட்டுநருக்கு வழங்குகிறார் மேயர் சைதை துரைசாமி. உடன், துணை மேயர் பா. பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர்

புசென்னை, ஜூலை 12: சென்னை நகரில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு புதிதாக 24 வாகனங்களை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.

சென்னையில் குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லாமல், பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசிகிறது. குப்பைகளை விரைவாக அகற்ற 15 கனரக டிப்பர் லாரிகள், 9 நவீன குப்பை அள்ளும் இயந்திரங்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டடத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதனை மேயர் சைதை துரைசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: ஒரு டிப்பர் லாரியின் விலை ரூ. 15 லட்சம். மொத்தம் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் 15 டிப்பர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. இதேபோல, நவீன குப்பை அள்ளும் இயந்திரத்தின் மதிப்பு ரூ. 56.35 லட்சம். 9 இயந்திரங்களின் மதிப்பு மொத்தம் சுமார் ரூ. 5.07 கோடி.

இந்த புதிய வாகனங்கள் மூலம் குப்பை அள்ளும் பணியை மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின்போது துணை மேயர் பா. பெஞ்சமின், ஆணையர் கார்த்திகேயன், இணை ஆணையர் பூஜை குல்கர்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.