Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை அள்ளும் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 500 டிரை சைக்கிள்கள்மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினகரன்      23.08.2012

குப்பை அள்ளும் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 500 டிரை சைக்கிள்கள்மாநகராட்சி ஏற்பாடு

சென்னை,: விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளும் பணி மாநகராட்சி மற்றும் தனியார் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு லாரிகள், பொக்லைன்கள் போன்ற இயந்திரங்களும் மனித உழைப்பும் உள்ளது என்றாலும் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் தேங்கியே இருக்கின்றன.

இதையடுத்து தற்காலிக பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் குப்பை அள்ளும் பணிக்காக பாடி கட்டிய 500 டிரை சைக்கிள்களை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சிக்கு குப்பை அள்ளும் பணிக்கு 500 டிரை சைக்கிள்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிரை சைக்கிள்களை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட டிரை சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி, அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து டெண்டர்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சியின் டெக்னிக்கல் புளு பிரிண்ட் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களோடு மட்டுமே டிரை சைக்கிள்கள் இருத்தல் வேண்டும். டிரை சைக்கிள்களில் குப்பை அள்ளிச்செல்லும் வகையில் பாடி கட்டியிருத்தல் வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட டிரை சைக்கிள்களை மாநகராட்சியின் பொறியியல் பிரிவினர் சோதனை செய்து ஒப்புதல் அளித்த பின்னரே பணிகளுக்கு பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட டிரை சைக்கிள் உற்பத்தியாளர் கடந்த 2009-10, 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.30 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்திருக்க வேண்டும். இந்த காலங்களில் மாநகராட்சி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 300 டிரை சைக்கிள்கள் சப்ளை செய்திருக்க வேண்டும். அத்தகைய நிறுவனத்தார் இந்த காண்டிராக்ட் டெண்டரில் பங்கேற்கலாம். இந்த டெண் டர்கள் வரும் 31ம் தேதி திறக்கப்படுகின்றன. டெண்டர்கள் இறுதி செய்யப் பட்டு, பெறப்படும் டிரை சைக்கிள்கள் குப்பை அள்ளும் பணிக்கு பயன்படுத்தப்படும். இதனால் பணிகள் துரிதப்படும்.