Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காசிபாளையத்தில் பாதாள சாக்கடை ரூ 26 கோடியில் அமைக்க திட்டம்

Print PDF

தினகரன்      04.09.2012

காசிபாளையத்தில் பாதாள சாக்கடை ரூ 26 கோடியில் அமைக்க திட்டம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில் வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக உள்ளாட்சி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.61.89 கோடி, ஜெர்மன் நிதி ஆதாரத்தில் கடனாக ரூ.71.14 கோடி, மானியமாக ரூ.62.77 கோடி, உள்ளூர் திட்டக்குழு மானியமாக ரூ.3.60 கோடி, கூடுதல் மானியமாக ரூ.9.82 கோடி என ரூ.209.22 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படும் இந்த சாக்கடை திட்டம் 498.6 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. திட்டம் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க பீளமேடு என்ற இடத்தில் 18.27 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கழிவுநீரை சுத்தப்படுத்தி ஆற்றில் விடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சியில் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிகளான கங்காபுரம், முத்தம்பாளையம், எல்லப்பாளையம், திண்டல், வில்லரசம்பட்டி ஆகிய கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பகுதியாக பணிகளை செய்து வரும் நிலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு ரோடுகள் போடும் பணிக ளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பகுதி 4ல் பாதாள சாக்கடைக்காக பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதால் பகுதி, பகுதியாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. தற்போது 4வது பகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசிபாளையம் பகுதியை உள்ளடக்கிய இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 26 கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 111 ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யும் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் மாநகராட்சியிலும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.இவ்வாறு அதிகாரி கூறினார்.