Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாரச்சந்தை வளாகத்தில் நவீன பல்நோக்கு வணிக வளாகம்: நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF

தினமலர்          05.09.2012

வாரச்சந்தை வளாகத்தில் நவீன பல்நோக்கு வணிக வளாகம்: நகராட்சி சேர்மன் தகவல்

நாமக்கல்: ""வாரச் சந்தை வளாகத்தில், 250 கடைகள் கொண்ட, பல்நோக்கு நவீன வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,'' என, நகராட்சி சேர்மன் கரிகாலன் பேசினார்.

நாமக்கல் நகராட்சியில், புதிய வணிக வளாகம் கட்டுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் கரிகாலன் தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் வாரச்சந்தை வளாகத்தில், 2.290 ஏக்கர் பரப்பளவில், 23.50 கோடி ரூபாய் மதிப்பில், 250 கடைகள் கொண்ட பல்நோக்கு நவீன வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச மதிப்பீடுகள், வரைபடமும் பெறப்பட்டுள்ளது.வணிக வளாக தரைத் தளத்தில், 20 ஆயிரத்து, 700 ச.அ., பரப்பில், 30 கடை, முதல் தளத்தில், 24 ஆயிரத்து, 900 ச.அ., பரப்பில், 24 கடை, இரண்டாவது தளத்தில், 21 ஆயிரத்து, 300 ச.அ., பரப்பில், 16 கடை, மூன்றாவது தளத்தில், 17 ஆயிரம் ச.அ., பரப்பில், 14 கடை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
மொத்தம், 83 ஆயிரத்து, 900 ச.அ., பரப்பில் அமைய உள்ள வணிக வளாகத்தில், ஒரு ச.அ.,க்கு, 1,000 ரூபாய் என்ற விகிதத்தில் வைப்பு பெறப்படும்.அதன் மூலம், 8.40 கோடி ரூபாய் வைப்புத் தொகையும், ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் வீதம் வருவாயும் ஈட்ட வாய்ப்புள்ளது. வணிக வளாகத்தை தொடர்ந்து, தினசரி அங்காடி கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இரண்டு கோடி ரூபாய் வைப்புத் தொகை, ஆண்டுக்கு, 46 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது.

ஓரிரு மாதத்தில், அரசின் அனுமதி பெற்று, இத்திட்டம் மேற்கொள்ளப்பட உளளது. வணிக வளாகத்தில் கட்டப்படும் கடைகளுக்கு, முன் ஏலம் விடப்பட்டு பெறப்படும் டெபாசிட் மூலம் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, நகராட்சி கமிஷனர் செழியன், பொறியாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.