Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்

Print PDF
தினமணி          22.05.2013

அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்


அம்மா உணவகங்களுக்காக ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விகர்ம் கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உணவகத்திலும் 2,000 சப்பாத்திகள் மற்றும் பருப்பு கடைசல் தயாரித்து மொத்தம் 4 லட்சம் சப்பாத்திகள் தயாரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக் குழு மூலம் ஒரு மணி நேரத்தில் 50 சப்பாத்திகள் மட்டுமே தயாரிக்க முடியும். ஆனால் நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு மணிநேரத்தில் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும். இந்த இயந்திரங்களை நிறுவ சுமார் 3 மாதம் ஆகும். சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்கள், பருப்பு கடைசல், சாம்பார், சாம்பார் சாதம், உள்ளிட்டவைகளை தயாரிக்க பொருள்கள் கொள்முதல் செய்யவேண்டும். இதற்கு சுமார் ரூ. 4 கோடி ஆகும், என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.