Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக் கட்டடங்களில் சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்த முடிவு

Print PDF
தினமணி         30.05.2013

மாநகராட்சிக் கட்டடங்களில்  சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்த முடிவு


திருநெல்வேலி மாநகராட்சி கட்டடங்களின் மேல் தளத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெறும் அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மின் பற்றாக்குறையைச் சமாளிக்க சூரியஒளி மின்சக்திக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதையடுத்து கடந்த ஆண்டு சூரியஒளி மின்சக்தி கொள்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 2015-க்குள் சூரியஒளியில் இருந்து 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்களில் சூரியஒளி மின்சக்தி வசதி கட்டாயம் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள கட்டடங்களில் சூரியஒளி மின்தகடுகளைக் கொண்ட கூரைகள் படிப்படியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சூரியஒளி மின்சக்தி சாதனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சிக்கனத்தையும், சூரியஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பையும் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதற்காக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சூரியஒளி மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதற்கான அளவுக் குறியீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு குறியீடுபடி சூரியஒளி அமைப்பை மாநகராட்சி கட்டடங்களின் மேல் தளங்களில் படிப்படியாக அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான செலவை தமிழக அரசிடம் இருந்து பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.