Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்திற்கு திட்ட நிதியாக ரூ.37.128 கோடி ஒதுக்கீடு

Print PDF
தினபூமி       11.06.2013

தமிழகத்திற்கு திட்ட நிதியாக ரூ.37.128 கோடி ஒதுக்கீடு


புதுடெல்லி, ஜூன்.11 - டெல்லியில் நேற்று  மாலை நடைபெறும் திட்டக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று ,அங்கு மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து தமிழ்நாட்டின் 20132014ம் ஆண்டு திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

டெல்லியில் நடைபெறும்  திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்திலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..

புதுடெல்லியில்நேற்று மாலை நடைபெறும் திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று  காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுடெல்லி வருகை தந்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு போயஸ் கார்டனில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டபோது செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். டெல்லி பயணம் குறித்தும், நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தும் சில கருத்துக்களை முதலமைச்சர் நிருபர்களிடம் தெரிவித்து பின்னர் விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

போயஸ் தோட்ட வளாகத்திலும், சென்னை விமான நிலையத்திலும் தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் மலர் கொத்து கொடுத்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

டெல்லி வருகை தந்த முதலமைச்சரை விமான நிலைய வளாகத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், அதிமுக எம்பிக்கள் டாக்டர் மைத்ரேயன், தம்பிதுரை, ஓ.எஸ்.மணியன், குமார், இளவரசன், திருப்பூர் சிவசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சருக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்திற்கு வெளியே டெல்லி பிரதேச அதிமுக சார்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமான மகளிர்களும் கைகளில் அதிமுக கொடிகளை ஏந்தி வாழ்த்து முழக்கம் எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சரை அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் சிறப்பு அணிவகுப்பும் முதல்வருக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அங்கு மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை  சந்தித்த்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டிஅளித்த அவர், தமிழகத்துக்கு 37,128 கோடி நிதி ஒதுக்கும்படி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-

2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்ற ஆண்டிலும் 20 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு திட்ட இலக்கைக்கூடாது தமிழகம் சாதனை படைத்தது. அதேபோல இப்போதும் 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும்.

பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
Last Updated on Tuesday, 11 June 2013 11:05