Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் மேயர் சைதை துரைசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி               24.06.2013

திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் மேயர் சைதை துரைசாமி தகவல்


திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

தொடக்க விழா

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் எண்ணூர் பகுதிகளில் ரூ.3..73 கோடி செலவில் 1,363 மின்விளக்குகள் சென்னை மாநகராட்சி சார்பில்.அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மேயர் சிறப்பு நிதியிலிருந்து தாழங்குப்பம், திருவொற்றியூர் குப்பம் பகுதியில் 2 உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் அருகே ரூ.42 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் நவீன சுடுகாடு புணரமைக்கப்பட்டுள்ளது.இவற்றின் தொடக்க விழா திருவொற்றியூர் தேரடியில் மண்டல குழு தலைவர் மு.தனரமேஷ் தலைமையில் நடைபெற்றது. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன் முன்னிலை வகித்தார்.விழாவில் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு மின்விளக்குகளை இயக்கி வைத்து பேசியதாவது:–

உள்விளையாட்டு அரங்கம்

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளின் தரத்தை உயர்த்தி சென்னை மாநகராட்சிக்கு இணையாக மாற்ற முதல்–அமைச்சர் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளார். 110 விதியின் கீழ் ரூ.300 கோடி செலவில் 1 லட்சத்து 10 ஆயிரம் தெருவிளக்குகள் அமைய இருக்கிறது. இதில் திருவொற்றியூர் மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் மின்விளக்குகள் அமைய உள்ளன. அதேபோன்று தரமான சாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மயானம் சீரமைக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் பகுதியில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. 2 இடங்களில் நவீன மீன் மார்க்கெட், நவீன திருமண மண்டபங்கள் என முதல்வர் உத்தரவின் பேரில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்றைக்கு அம்மா உணவகம் சரித்திரம் படைக்கிறது. செப்டம்பர் மாதத்திலிருந்து 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 3 வேளைகளுக்கும் சேர்த்து 25 ரூபாய் இருந்தால் போதும் வயிறு நிறைய சாப்பிடலாம் என்ற நிலையை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் முதல்–அமைச்சர் உருவாக்கியுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம், கவுன்சிலர்கள் மற்றும் நகர நி£வாகிகள் கலந்து கொண்டனர்.