Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

74 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

Print PDF

தமிழ் முரசு          24.08.2013

74 லட்சத்தில் அடிப்படை வசதிகள்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டம் தலைவர் அமுதா முனுசாமி தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பங்கஜம் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், எல்.சங்கர், மாலதி, வி.சங்கர், தி.வே.முனுசாமி, முருகன், கருணாநிதி, வேணுகோபால், செண்பகவல்லி, திருநாவுக்கரசு, சுபாஷினி, விஜயலட்சுமி, சந்திரன், ராசாத்தி ஆகியோர் குறைகளை குறித்தும் அவற்றை நிறைவேற்றி தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இதன் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருமழிசை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 5 இடங்களில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். ரூ.4 லட்சத்தில் மடவிளாகம் பம்ப் அறை முதல் தெற்கு மாடவீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிவரை பைப் லைன் அமைப்பது, ரூ.40 லட்சம் மதிப்பில் பாரதி நகரில் தார் சாலை அமைப்பது. ரூ.20 லட்சம் மதிப்பில் குண்டுமேடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது தரைமட்ட தொட்டி, பம்ப் அறை கட்டுவது. ஜோசப் நன்றி கூறினார்.