Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம்

Print PDF

தினத்தந்தி              02.09.2013

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம்

 

 

 

 

 

திருச்சி மாநகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

நவீன உடற்பயிற்சி மையம்

திருச்சி மாநகராட்சி 21-வது வார்டில் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கினார். இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மூலம் வரகனேரி பெரியார் நகரில் தனியாக கட்டிடம் கட்டி அதில் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த உடற்பயிற்சி மையத்தில் நவீன நடைபயிற்சி கருவி, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சி செய்யும் கருவிகள், பளுதூக்கும் பயிற்சிக்கான சாதனங்கள் ஆகியவை வைக்கப்பட்டு உள்ளன. கழிவறை மற்றும் குளியல் அறை வசதியும் உள்ளது. இந்த பயிற்சி மையத்தை அரசு தலைமை கொறடா மனோகரன் திறந்து வைத்தார்.

சுய உதவி குழு பராமரிப்பு

இந்த பயிற்சி மையம் ஆண்கள் சுயஉதவி குழுவின் கட்டுப்பாட்டில் விடப்பட்டு பராமரிக்கப்படும் என்றும், இதனை பயன்படுத்தும் இளைஞர்களிடம் மாதா மாதம் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அப்போது அரசு தலைமை கொறடா மனோகரன் தெரிவித்தார்.

விழாவில் மேயர் ஜெயா, துணை மேயர் மரியம்ஆசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைய தலைவர் வெல்லமண்டி நடராஜன், அரியமங்கலம் கோட்ட தலைவர் சீனிவாசன், துணை தலைவர் பத்மநாதன், கவுன்சிலர்கள் அய்யப்பன், முஸ்தபா, ராஜேந்திரன், பகுதி செயலாளர் கலீல்ரகுமான், அவைத்தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.