Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எட்டயபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோட்டில்: மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு

Print PDF

தினமலர்           27.09.2013

எட்டயபுரம் ரோடு, திருச்செந்தூர் ரோட்டில்: மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் எட்டயபுரம் ரோடு மற்றும் திருச்செந்தூர் ரோடு ஆகிய இடங்களில் தலா ஒரு வரவேற்பு வளைவு அமைப்பதற்கு 20 லட்ச ரூபா ய் அனுமதித்து இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமையில் கமிஷனர் மதுமதி முன்னிலையில் நடக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி வார்டு எண் 10 அம்பேத்கர் நகர் மெயின் ரோடு எம்ஜிஆர் சிலை வடக்கில் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் அபாயகரமான மாநகராட்சி பம்பிங் கட்டடத்தினை இடிக்க இன்றைய கூட்டத்தில் அனுமதியளித்து தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு உத்தரவுப்படி 1.10.2013 முதல் (2013-2014) இரண்டாம் அரையாண்டு முதல் வருமான வரம்பு விகிதத்தை மாற்றம் செ ய்யாமல் ஏற்கனவே நிர்ணயம் செ ய்யப்பட்டுள்ள அரையாண்டு தொழில் வரியில் 25 சதவீதத்திற்கு குறையாமலும், 35 சதவீதத்திற்கு மிகாமலும் உயர்வு செ ய்து நிர்ணயம் செ ய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரையாண்டிற்கான வருமான வரம்பு 20 ஆயிரம் ரூபா ய் வரை தொழில் வரி கிடையாது. 20 ஆயிரத்து 1 ரூபா ய் முதல் 30 ஆயிரம் ரூபா ய் வரை 94 ரூபா ய், 30 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 45 ஆயிரம் ரூபா ய் வரை 238 ரூபா ய், 45 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 60 ஆயிரம் ரூபா ய் வரை 469 ரூபா ய், 60 ஆயிரத்து ஒரு ரூபா ய் முதல் 75 ஆயிரம் ரூபா ய் வரை 706 ரூபா ய், 75 ஆயிரத்து ஒரு ரூபாய் மற்றும் அதற்கு மேல் 938 ரூபா ய் தொழில் வரி செலுத்த வேண்டும். இதற்கான அனுமதியும் இன்று மாநகராட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான 35, 36, 37, 42, 43, 44, 46, 47 ஆகிய 8 வார்டு பகுதியில் தனியார் மூலம் குப்பை அள்ளும் பணிக்கு ஓராண்டு காலத்திற்கு ஆகும் செலவு தொகை ஒரு கோடியே 96 லட்சத்திற்கு அனுமதியளித்தும், இதே போல் வார்டு எண் 4, 6, 19, 20, 25, 32, 33 ஆகிய ஏழுவார்டு பகுதியில் தனியார் மூலம் குப்பை அள்ளும் பணிக்கு ஓராண்டிற்கு ஆகும் செலவு தொகை ஒரு கோடியே 65 லட்சத்திற்கு அனுமதியளித்தும் தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்குப் பகுதி எட்டயபுரம் சாலையில் மாநகராட்சி எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு (ஆர்ச்) 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபா ய் செலவிலும், மாநகராட்சி பகுதி அத்திமரப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் வரவேற்பு வளைவு (ஆர்ச்) 9 லட்சத்து 95 ஆயிரம் செலவிலும் அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.