Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சியில் 19 கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறப்பு

Print PDF

தினத்தந்தி            21.10.2013

கோவை மாநகராட்சியில் 19 கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறப்பு

கோவை மாநகராட்சியில் 19 வார்டுகளில் கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

கவுன்சிலர் அலுவலகங்கள்

கோவை மாநகராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி அறிவித்திருந்தார்.அதன்படி கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் முதல்கட்டமாக 19 வார்டு கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அலுவலகங்கள் திறப்பு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97-வது வார்டு சுந்தராபுரம் தக்காளி மா£க்¢கெட் அருகிலும், 98-வது வார்டு போத்தனூர் ரயில்வேகேட் அருகில் உள்ள அம்மா உணவக வளாகத்திலும் 2 கவன்சிலர்களுக்கான வார்டு அலுவலகங்களை மேயர் செ.ம.வேலுசாமி முன்னிலையில் அமைச்சர் செ.தாமோதரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

இதேபோல் கிழக்கு மண்டலம் 37-வது வார்டு குருசாமி நகரிலும், 56-வது வார்டு சந்திரகாந்தி நகர் பகுதியிலும், தெற்கு மண்டலம் 92-வது வார்டு பாலக்காடு ரோடு குனியமுத்தூர்,78-வது வார்டு செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியிலும் மற்றும் மேற்கு மண்டலம், மத்தியமண்டலம் ஆகிய பகுதிகளிலும் கவுன்சிலர்களுக்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் ஆர் சின்னசாமி, எஸ்.பி.வேலுமணி, தா.மலரவன், ஆர்.சேலஞ்சர் துரை, மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, துணை ஆணையாளர் சு.சிவராசு, மண்டலத்தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், பி.சாவித்திரி, கே.ஏ ஆதிநாராணயன், குழுத்தலைவர்கள் அம்மன் அர்ச்சுனன், பிரபாகரன் சாந்தாமணி, நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர பொறியாளர் சுகுமார், கண்காணி¢ப்பு பொறியாளர் கணேஷ்வரன், செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.