Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' சைகை மொழியில் பாடத்திட்டம்

Print PDF

தினமலர்           21.10.2013

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' சைகை மொழியில் பாடத்திட்டம்

கோவை :கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (ஏ.ஐ.எப்.,) சார்பில், கம்ப்யூட்டர் கல்வித்திட்டம், டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங், இங்கிலீஷ் ஹெல்பர், சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு "டேப்லெட்' கல்வி முறை வழங்கப்படுகிறது.

ஏ.ஐ.எப்., இந்தியாவுக்கான இயக்குனர் ஹேமந்த்பால், ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு நடப்பதை ஆய்வு செய்தார். மாணவர்களின் ஆங்கில அறிவுத்திறன் குறித்து விசாரித்தார். "வகுப்பிலும், வீட்டிலும் ஆங்கில மொழியில் பேச மாணவர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். சக மாணவர்களுக்குள் ஆங்கில மொழியில் பேச வேண்டும். ஆங்கில மொழி வகுப்பை, முழுமையாக ஆங்கிலத்தில் தொடர வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் "ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க வேண்டும்' என்றார்.

ரத்தினபுரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தபோது, டிஜிட்டல் இக்குலைசர் புரோகிராமில், பாடம் நடத்துவது, திட்டங்களை உருவாக்குவது குறித்து மாணவர்களிடம் விசாரித்தார். "கம்ப்யூட்டர் தொழில்நுட்ப முறையுடன் இணைந்து மாணவர்கள் பாடம் கற்கும் முறையை ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.

ஹேமந்த்பால் கூறுகையில், ""ஆர்.எஸ்.புரம் காது கேளாத, வாய் பேச முடியாத சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 24 டேப்லெட், ஆசிரியர்களுக்கு ஆறு டேப்லெட் வழங்கப்பட உள்ளது. இதனால், மாணவர்கள் முன்கூட்டியே பாடத்தை கற்றுக்கொள்ளலாம். சைகை மொழியில் ஆசிரியர் பாடம் நடத்துவது வீடியோ எடுக்கப்பட்டு, டேப்லெட்களில் பதிவு செய்யப்படும்.

இதன் மூலம், சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும். சிறப்பு பள்ளிக்கு ஏ.ஐ.எப்., சார்பில் பயிற்றுனர் ஒருவர் நியமிக்கப்படுவார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், ஆங்கிலம் மொழிக்கல்வி அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.