Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் சுகாதார வளாக பணிகள் ஜரூர்

Print PDF

தினகரன்         04.11.2013

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் சுகாதார வளாக பணிகள் ஜரூர்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 35 சுகாதார வளாகங்கள் மராமத்து பணிகள் ரூ.1 கோடியே 3 லட்சத்து 15 ஆயிரம் செல வில் நடைபெற்று வருகிறது.

இதன்படி 3வது வார்டு டிரைனேஜ் தெருவில்  நவீன கழிப்பிடம் ரூ. 9 லட்சத்தில் கட்டவும், இதுபோல தேவி தெரு பஸ் ஸ்டாப் அருகிலும், 1வது வார்டு தெப்பக் குளத் தெருவில் உள்ள நவீன கழிப்பிடமும் ரூ.4.5 லட்சத்திலும் மரா மத்து பணிகள் நடை பெற்று வருகிறது. 4 வது வார்டு மற்றும் 5வது வார் டில் உள்ள கன்னிமார் தோப்பு, கீதா புரம் கல்மேட் டுத் தெரு, திருவானைக்காவல் தெப் பக்குளம் மற் றும் தாகூர் தெருக்களில் உள்ள 6 கழிப்பிடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பிலும் பராமரிப்பு  பணிகள் நடக்கிறது.

8வது வார்டு சிந்தாமணி பதுவை நகர் சுகாதார வளாகம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. வார்டு எண் 19 வெல்லமண்டி ரோடு மற்றும் 21 வது வார்டு வரகனேரி பெரியார் நகர் நவீனக் கழிப்பிடம் ரூ.2 லட்சத்திலும், 22 வது வார்டு மல்லிகைபுரம் பிரதானசாலையில் ஆண் கள், பெண்கள் நவீன கழிப்பிடம், மற்றும் 23 வது வார்டு செங்குளம் காலனி நவீன கழிப்பிடம் ரூ. 9 லட்சத்தில் மராமத்து பணிக ளும், 39 வது வார்டு எடமலைப்பட்டிப்புதூர் நவீன கழிப்பிடம் ரூ.2 லட்சத்தி லும், 40 வது வார்டு ராஜம்நகர் நவீன கழிப்பி டம் ரூ.5 லட்சம் மதிப்பிலும், எம்ஜி ஆர் நகர் நவீன பொதுக் கழிப்பிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலும், 45வது வார்டு சின்ன மிளகு பாறை பகுதி  ஒருங்கிணைந்த சுகா தார வளாகம் ரூ.5 லட்சத் தில் மராமத்து பணிகளும், 51வது வார்டு சங்கீதபுரத் தில் உள்ள நவீன கழிப்பிடத்தில் ரூ 4.9 லட்சத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

52வது வார்டு மேல வண்ணாரப்பேட்டை மற் றும் கல்லாங்காடு பகுதி நவீன கழிப்பிடங்களில் ரூ.4.லட்சம் செலவில் மரா மத்து பணிகள் நடக்கி றது.மேலும் 2.5 லட்சம் மதிப்பில் 52வது வார்டு மீன்காரத்தெரு நவீன கழிப் பிட மராமத்து பணிகளும், 54 வது வார்டில் ரூ.2.5 லட் சம் மதிப்பீட்டில் ரூ 2.5 லட்சத்தில் மராமத்து பணி கள் செய்யப்படுகிறது. 49 வது வார்டில் அன்னை சத்யா நகர் நவீன கழிப்பிடத்தில் ரூ.3 லட்சம் மதிப் பீட்டில் சீரமைக்கும் பணி நடக்கிறது. 50வது வார்டு வாமடம் ஆண்கள் நவீன பொதுக்கழிப்பிடம் மற்றும் பொது சுகாதார வளாகத் தில் ரூ.7 லட்சம் செலவில் மராமத்து பணிகள் நடக்கி றது. 55வது வார்டு செட்டிப்பேட்டை ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் காந்திரபுரம்  ஒருங்கிணைந்த சுகாதார வளா கம் ஆகியவற்றில் ரூ. 6 லட்சத்தில் மராமத்து பணி கள் நடைபெற்று வருகிறது.

56 வது வார்டு தில்லைநகர் ஒருங்கிணைந்த சுகா தார வளாகத்தில் ரூ.5லட்சத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. 57வது வார்டு சோழராஜபுரம் ஒருங்கிணைந்த சுகா தார வளாகத்தில் ரூ.5 லட் சம் செலவில் மராமத்து பணிகள் நடக்கிறது. 58வது வார்டில் டாக்கர் ரோடு மற்றும் காளையன் தெரு வில் உள்ள நவீன கழிப்பிடம் ரூ.3 லட்சத்திலும், 59 வது வார்டு பங்காளி தெரு நவீன கழிப்பிடத்தில் ரூ.5 லட்சம் செலவில் மராமத்து பணிகளும் நடந்து வருகி றது. 60 வது வார்டில்  கீழ கல்நாயக்கன் தெரு நவீன கழிப்பிடத்தில் ரூ. 3.5 லட் சம் செலவிலும், பாண்டமங்கலம் கிழக்கு பகுதியில் உள்ள நவீன கழிப்பிடத்தில் ரூ. 2.5 லட்சத்திலும் மரா மத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது போல திருச்சி மாநகராட்சி பகுதி யில் உள்ள 35 சுகாதார வளாகங்கள் மற் றும் நவீன கழிப்பிடங்களில் ரூ. 1 கோடியே 3 லட் சத்து 15 ஆயிரம் செலவில் மரா மத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.