Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

Print PDF

தினகரன்          02.12.2013

ரூ.20.30 லட்சத்தில் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்குவிரைவில் அமைக்க ஏற்பாடு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி  சார்பில் கொட்டப் பட்டில் ரூ.20.30 லட்சம் செலவில் நாய்கள் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அரங்கு அமைக் கும் பணி விரைவில் துவங்குகிறது.

திருச்சி மாநகராட்சி யில் உள்ள 4 கோட்டங்களி லும் நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் பலர் பாதிக்கப் பட்டு வருகின்ற னர். இத னால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பிடிக்கப்பட்ட நாய்களை திருவளர்ச்சோலைக்கும், பனையபுரத்திற் கும் இடையில் கொள்ளிட கரையில் விட்டுவிட்டனர். இதில் பல நாய்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று அச்சுறுத்துகிறது.

இதனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், நாய் களை பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வது என்று முடிவு செய்தது. அதற்காக கொட்டப்பட் டில் துப்புரவு பணியாளர் கள் குடியிருப்பு அருகில் ரூ.20.30 லட்சம் மதிப்பில் நாய்கள் இனக்கட்டுப் பாட்டு அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க முடிவு செய்தது. அதன்படி நாய் கள் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க பணி யாணை தயாரிக்கும் பணி யில் இறங்கியுள்ளது.

இந்த பணி விரைவில் துவங்க உள்ளது. ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே நாய்கள் தொல்லை அதிகம். பிடித்து  வரும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து எங்கள் பகுதியில் விட் டால் மேலும் தொல்லை அதிகமாகும். எனவே எங் கள் பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்க வேண்டாம்‘ என்று 38வது வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த பகுதியில் இருந்து நாய் களை பிடிக்கிறதோ, அந்த பகுதியிலேயே நாய்களை விட்டுவிடுவோம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மிக விரைவில் கொட்டப்பட்டில் நாய்க ளின் இன கட்டுப்பாட்டை தடுக்க, அறுவை சிகிச்சை அரங்கு அமைகிறது.