Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

திருவத்திபுரம் புதிய நகராட்சி அலுவலகம் காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தினை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 திருவத்திபுரம் நகராட்சி அலுவலகக் கட்டடம் போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்ததால், ரூ.99.90 லட்சம் மானியம் பெறப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்து வந்தது.

 இதனை திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நகராட்சி அலுலகத்தில் திருவத்திபுரம் நகர்மன்றத் தலைவர் பாவை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜு, நகர்மன்ற உறுப்பினர்கள் விநாயகம், கே.வி.வெங்கட்ராமன், பி.எஸ்.ஏகாம்பரம், கே.செந்தில், ஆர்.முருகன், ஜெ.ரமணமுருகன், சரஸ்வதி, எ.ஊஷாராணி, ஆயிஷாபீ, எ.பவானி, கே.செல்வதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சிவானந்தகுமார், துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணி, துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் பணியாளர்களும் செய்து இருந்தனர்.