Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்

Print PDF

தினமணி              30.12.2013

சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்துக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸிங் முறையில் அடிக்கல் நாட்டுகிறார்.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம் அரசு அதிநவீன மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அலுவலகங்களின் எண்ணிக்கையும், வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டிய நிலை உருவானது.

 இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இதையடுத்து, இப்போது உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.7.68 கோடியில் தரைத்தளம், இரண்டு மாடிகளைக் கொண்ட ஒருங்கிணைந்தக் கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன.

 இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி முறையில் காலை 11 மணிக்கு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 இதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆணையர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.