Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி             02.01.2014

பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் போது பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு ரூ.40 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதை தொடர்ந்து புதியதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த புதிய கட்டிடத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் நடந்தது. இதில் சேலம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செம்மலை, வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சேலம் மண்டல பேரூராட்சிகள் இயக்குனர் பழனியம்மாள், பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் பாலசந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நகர செயலாளர் சின்னதம்பி, ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி, துணை தலைவர் பொன்னுசாமி, பேரூராட்சி செயல்அலுவலர் தாமோதரன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் தேவகி, ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.