தினகரன் 03.01.2014
ரூ.81 லட்சத்தில் மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு
கோவை, : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள 33 மற்றும் 34வது வார்டுகளில் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிதாக 19 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 33வது வார்டு ராமச்சந்திரா சாலை கிழக்கு பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பில் 11 கடைகளுடன், வணிக வளாகம், 34 வது வார்டில் 37 லட்சம் மதிப்பில் 8 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல், தெலுங்குபாளையத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கடன் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை, மேயர் வேலுச்சாமி திறந்துவைத்தார். மேலும், 87வது வார்டில் பிருந்தாவன் பகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணிகளையும், 93வது வார்டில் 5 தெருக்களில் ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளையும் மேயர் துவக்கிவைத்தார்.