Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி               08.01.2014

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெருந்துறை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் பவானி பிரதான சாலை முதல் வழுவுக்காடு பிரதான வீதி இறுதி வரை ரூ.8 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை புதுப்பிக்கும் பணி, பாண்டியன்வீதி முதல் வழுவுக்காடு வரை ரூ.7.6 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்தின்கீழ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.47.05 மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ். பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், வெட்டையங்கிணறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திங்களூர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.