Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

Print PDF

தினமணி            14.01.2014

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

காரைக்குடி நகராட்சியின் சார்பில் ரூ. 56.70 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் துவக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கல்லுக்கட்டி வடக்கு கணபதி பூங்கா இடத்தில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்காக 2012-2013 ஆம் ஆண்டின் பின்தங்கிய பகுதிகளுக்கான வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பிலும், கல்லுக்கட்டி மேற்கு பகுதியில் நவீனகட்டண கழிப்பிட சுகாதார வளாகம் 2013-2014 ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலும், புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளுக்கு இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை மற்றும் பயணிகள் தங்குமிடம் மேம்படுத்த நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 9.70 லட்சம் மதிப்பிலும் பணிகள் நிறைவடைந்தன.

இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்கவிழாவில் காரைக்குடி நகர் மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ துவக்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கா. மாரியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி நகர்மன்றத் துணைத் தலைவர் சோ. மெய்யப்பன், காரைக்குடி டி.எஸ்.பி. முருகேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் சி. மெய்யர், ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.