Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

Print PDF

தினகரன்          20.01.2014

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

கோவை, : கோவை மாநகராட்சி வசம் உள்ள பூங்காங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கும்  திட்டத்தை கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, 26 பூங்காங்களை முதல்கட்டமாக அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாநகராட்சி 17வது வார்டு நவாவூர் பிரிவு குருசாமி நகரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வடவள்ளி ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் சார்பில்  ரூ.30 லட்சம் மதீப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு சுற்றுசுவர், நடை பயிற்சி பாதை, மருத்துவ மரவகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், இறகுபந்து மைதானம், விழா மேடை, புல்வெளிகள் மற்றும் வண்ணவிளக்குகள் அமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் பூங்காவினை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர். மோகன், இயக்குநர்கள் ராமநாராயணன், அருள்ஆண்டனி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தக்ஷா பொது மேலாளர் ரமாவேலாயுதம் திட்டவுரை ஆற்றினார்.

விழாவில் தா.மலரவன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் லதா, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சாவித்திரிபார்த்திபன், கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார், மனித நேய பேரவை உமாதாணு, வனக்குழு தலைவர் பார்த்திபன், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 23 January 2014 09:17