Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாகனங்களுடன் கூடிய இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு அளிப்பு

Print PDF

தினமணி 6.11.2009

வாகனங்களுடன் கூடிய இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு அளிப்பு

திருப்பூர், நவ.5: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய ரூ.54 லட்சம் மதிப்பில் வாகனங்க ளுடன் கூடிய 2 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ள ன. அந்த இயந்திரங்கள் கள பயன்பாட்டுக்காக பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 32 வார்டில் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் (என்டிஏடிசிஎல்) மூலம் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து 16 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற திருப்பூர் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடி என்டிஏடிசிஎல்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடையில் ஏதேனும் அடைப்புகள் ஏற் பட்டால் அதை சரிசெய்ய திருச்சி, மதுரை, கோ வை மாநகராட்சிகளிடம் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வந்தன.

இதனால், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.இது தொடர்பாக பல்வேறு மாம ன்ற கூட்டங்களிலும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுதெரிவித்து வந்தனர். இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய மாநகராட்சி நிர் வாகம் சார்பில் ரூ.54 லட்சம் மதிப்பில் வாகனங்களுடன் கூடிய அடைப்பு சரிசெய்யும் 2 இயந்தி ரங்கள் வாங்கப்பட்டன.

அந்த இயந்திரங்கள் மேயர் க.செல்வராஜ் தலை மையில் வியாழக்கிழமை மாநகராட்சி பொறியியல்பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறி யாளர் கௌதமன் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து அந்த இயந்திரங்களை செயல்படுத்தி அடைப்புகள் சரிசெய்வது குறித்து அனைத்து பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன.

Last Updated on Friday, 06 November 2009 06:34