Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.45 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கத்துக்கு ஆட்சியர் அடிக்கல்

Print PDF

தினமணி 07.11.2009

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.45 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கத்துக்கு ஆட்சியர் அடிக்கல்

மதுரை, நவ. 6: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஜாக்கிங் கிளப்பில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் வெள்ளிக்கிழமை நாட்டினார்.

அடிக்கல் நாட்டி அவர் பேசியது:

ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சமும், மக்கள் பங்குத் தொகையாக ரூ.10 லட்சமும், மேற்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்காக நிதியுதவி அளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில், மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.. கே.எஸ்.கே.ராஜேந்திரன், ஜாக்கிங் கிளப் தலைவர் கதிரேசன், பொருளாளர் போஸ்ரான், செயலர்கள் சந்திரன், டாக்டர் பஞ்சவர்ணம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.