Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்ற நவீன கருவிகள்

Print PDF

தினமணி 17.12.2009

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்ற நவீன கருவிகள்

கோவை, டிச.16: கோவையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

கான்கிரீட் கட்டங்களை இடிக்கக்கூடிய 5 நவீன இடிப்பு கருவிகள், ஸ்லாப்களை உடைக்க 2 அறுவை கருவிகள், உயர்ந்த கட்டடங்களில் எளிதாக ஏறுவதற்காக உயரமான ஏணி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அணியும் பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன.

இக் கருவிகளை கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் நகரமைப்புப் பிரிவு ஊழியர்களிடம் புதன்கிழமை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் நா.கார்த்திக், மேற்கு மண்டலத் தலைவர் வி.பி.செல்வராஜ், சுகாதாரக்குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, நகரமைப்புப் பிரிவு அலுவலர் ஆர்.செüந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய கருவிகளை கொண்டு ராமநாதபுரம் பகுதியில் புதன்கிழமையே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டன.

Last Updated on Thursday, 17 December 2009 08:50