Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் நகரம் முழுவதும் சிமென்ட் சாலை: நகராட்சி சேர்மன் ஜனகராஜ் உறுதி

Print PDF

தினமலர் 30.12.2009

விழுப்புரம் நகரம் முழுவதும் சிமென்ட் சாலை: நகராட்சி சேர்மன் ஜனகராஜ் உறுதி

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தார் சாலை அமைத்தல், அறிவியல் கண்காட்சி நடத்தியதற் கான பணிகளுக்கான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் குறித்து விவாதம் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

கணேஷ்சக்திவேல்: பாதாள சாக்கடை திட்டத் தால் தெரு சாலைகள் மோசமடைந்துள்ளன.

சேர்மன்: பாதாள சாக் கடை திட்டத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந் துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும்.

பாபு: மக்கும் குப்பை, மக்காத குப்பை திட் டத்தை கொண்டு வந்தும் பலனில்லை. கொட்டப்படும் குப்பையை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

சேர்மன்: குப்பைகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்து விடுகின்றனர். குப்பைகளை கொட்டுவதற்காக கஸ்பா காரணையில் மாற்று இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அசோக்குமார்: ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந் தவுடன், பைப் லைன் பணிகளையும் முடித்து சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.சேர்மன்: ஒரு பகுதி முடிவடைந்தவுடன் பைப் லைன் கொடுக்க இயலாது. அனைத்து பகுதியிலும் முடிந்த பிறகே சாலை அமைக்கப்படும். கடந்த 1996ம் ஆண்டு தமிழகத்திலேயே விழுப்புரம் நகராட்சிக்கு தான் அதிளவாக தார் சாலை அமைக் கப் பட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்தவுடன் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியின் பரிந்துரையின் பேரில் நகராட்சி முழுவதும் சிமென்ட் சாலை அமைக்கப்படும்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:03