Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மயான சேவைக்கு கூடுதல் அமரர் ஊர்திகள்: மாநகராட்சி மண்டலங்களிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 06.01.2010

மயான சேவைக்கு கூடுதல் அமரர் ஊர்திகள்: மாநகராட்சி மண்டலங்களிடம் ஒப்படைப்பு

சென்னை : மயான சேவைக்கு, சென்னை மாநகராட்சி கூடுதலாக 10 அமரர் ஊர்திகளை ஏற்பாடு செய் துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இறந்தவர் கள் உடலை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டு பெட்டிகள், பிரேதத்தை மயானத் திற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்திகள், இலவச சேவையாக மாநகராட்சி ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

இதில், பொதுமக்களின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், கூடுதலாக 10 அமரர் ஊர்திகளும், 15 குளிரூட்டு பெட்டிகளும் வாங்கி, மண்டல அலுவலகங்களிடம் ஒப்படைக்கப் பட்டன. நேற்று, ரிப்பன் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமரர் ஊர்திகள், குளிரூட்டு பெட்டிகள் மற்றும் சிறிய சாலைகளில் கட்டட இடிபாடுகளை அகற்ற பயன் படுத்தும் நவீன வாகனங்கள் ஆகியவற்றை மேயர் சுப்ரமணியன் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 38 மயானங்களிலும், பிரேதங் கள் அடக்கம் செய்வது இலவசமாக்கப்பட்டுள்ளது. அதோடு, 10 மண்டலங் களிலும் அமரர் ஊர்திகள், குளிரூட்டு பெட்டிகள் பொதுமக்கள் தேவைக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல், இலவசமாக வழங்கப் பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவை அதிகரித்துள்ளதால், மேலும் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், 10 அமரர் ஊர்திகள், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் 15 குளிரூட்டு பெட்டிகளும் வாங்கப்பட்டு, மண்டல அலுவலர்களிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2008 அக்டோபர் முதல் இதுவரை 5,469 நபர்களுக்காக குளிரூட்டு பெட்டிகளையும், 3,224 நபர்களுக்கு அமரர் ஊர்திகளும் பயன்படுத்தப்பட் டுள்ளன. பொதுமக்கள் இலவசமாக குளிரூட்டு பெட்டிகள், அமரர் ஊர்திகள் சேவை பெற, 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். சிறிய தெருக்கள், குறு கிய பகுதிகளில் கட்டட இடிபாடுகளை அகற்ற மாநகராட்சியில் ஏற்கனவே ஏழு வாகனங்கள் உள்ளன. மேலும், 37 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில், புதிதாக நான்கு நவீன ரக வாகனங்கள் வாங்கப்பட் டுள்ளன. இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Wednesday, 06 January 2010 06:14