Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலும் 10 அமரர் ஊர்தி

Print PDF

தினகரன் 06.01.2010

மேலும் 10 அமரர் ஊர்தி

சென்னை : இலவச சேவைக்காக ரூ.22 லட்சம் செலவில் 10 அமரர் ஊர்திகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.

இலவச சேவைக்காக அமரர் ஊர்திகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. மண்டலங்களுக்கு வாகனங்களை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னையிலுள்ள 38 மயானங்களிலும் சடலங்களை எரியூட்டுதல், புதைத்தல் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஏழை, எளியவர்களின் பயன்பாட்டிற்காக ஒரு மண்டலத்துக்கு ஒன்று என 10 அமரர் குளிர்சாதன பெட்டிகள், 10 அமரர் ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளன. மக்கள் இந்த சேவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு 10 அமரர் ஊர்திகள் ரூ.22.50 லட்சம் செலவிலும், அமரர் குளிர்சாதன பெட்டி ரூ.7 லட்சத்தில் 15ம் புதிதாக வாங்கி இன்று வழங்கப்பட்டுள்ளது.நகரின் பல பகுதிகளில் சிறிய தெருக்கள், சந்துகளில் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்ற சிறிய அளவிலான 4 லோடர் வாகனங்கள் ரூ.37.12 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டிட இடிபாடுகள் விரைவாக அகற்றப்படும்.இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, துணை ஆணையர் (கல்வி) எம்.பாலாஜி, மன்ற ஆளுங்கட்சி தலைவர் ந.ராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழு தலைவர் (பணிகள்) எஸ்.சுரேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் கே.ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 06 January 2010 07:07