Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீனம்பாக்கம் சுரங்கப்பாலம் திறப்பு

Print PDF

தினமலர் 07.01.2010

மீனம்பாக்கம் சுரங்கப்பாலம் திறப்பு

மீனம்பாக்கம் : மீனம்பாக்கம் சுரங்கப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.திருத்திய மதிப்பீடாக 10.2 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை எஞ்சிய பணிகளை மீண்டும் துவக்கியது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இழுபறியில் இருந்த மீனம்பாக்கம் சுரங்கப்பால பணிகள், சமீபத்தில் நிறைவடைந்தது.இதை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, இந்த சுரங்கப்பாலத்தை திறந்து வைத்து பேசினார்.

விழாவிற்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமை வகித் தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சந் தோஷ் கே மிஸ்ரா, எம்.எம்.., டாக்டர் காயத்ரி தேவி, ஆலந்தூர் நகராட்சி தலைவர் துரைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திறக்கப்பட்டுள்ள மீனம்பாக்கம் சுரங் கப்பாலத்தின் மொத்த நீளம் 413 மீட்டர். அகலம் 7.50 மீட்டர். இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாலத்தின் நான்கு புறமும், மழைநீர் கால்வாய்களுடன் கூடிய சர்வீஸ் சாலையும், பாலத்தின் இருபுறமும் 76 மின் விளக்குகளும் அமைக்கப்பட் டுள் ளன.

பாலத்தின் இருபுறமும், மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்தும் ரயில் பாதைகளை கடப்பதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.பயன்பெறும் பகுதிகள்: இப்பாலம் திறக்கப்படுவதால், மடிப்பாக்கம், மூவ ரசன்பேட்டை, திரிசூலம், நங்கநல் லூர், மேடவாக்கம், சோழிங்க நல்லூர், ராஜிவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த வாகனங்கள் மூலம் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையை அடைந்து விமான நிலையம், தாம்பரம் மற்றும் சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு கால விரயம் இன்றி சென்று அடைய முடியும்.

Last Updated on Thursday, 07 January 2010 06:21