Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம்

Print PDF

தினகரன் 01.02.2010

லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம்

சென்னை : சைதாப் பேட்டை, புதிய தலைமைச் செயலகத்தை ஒட்டிய வாலாஜா சாலையில் லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரி வித்தார்.

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில், இந்தியாவிலேயே முதன் முதலாக மாநகராட்சி சார்பில் ரூ.60.88 லட்சம் செலவில் லிப்ட் வசதியுடன் அமைக்கப் பட்ட நடை மேம்பாலத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். லிப்ட் மூலம் நடைமேம்பாலத்தில் சென்று பார்வையிட்டார். அவருடன் மேயர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, மண்டலக் குழு தலைவர் அன்புதுரை, கவுன்சிலர் கணேசன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் சென்றனர்.

பின்னர், ஸ்டெர்லிங் அவென்யூ மற்றும் அடையாறு சர்தார் படேல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைச் சிற்பங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம் பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாலையை மக்கள் எளிதாக கடந்து செல்வதற்காக ரூ.60 லட்சத்து 88 ஆயிரம் செலவில் இரண்டு லிப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் ரூ.94 லட்சத்தில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது. புதிய தலை மைச் செயலகம் கட்டப்படும் பகுதியில் உள்ள வாலாஜா சாலையில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதியின் பயன்பாட்டை கவனித்து, சென்னை மாநகரில் மேலும் பல இடங்களில் நடை மேம்பாலங்களுக்கு லிப்ட் வசதி செய்யப்படும்.

சிலம்பாட்டம், கரகாட் டம், பொய்க்கால் குதிரை, களரி சிற்பம், மரப் பதுமை போன்ற தமிழர்களின் நாகரிக கலாசாரங்களை பிரதிபலிக் கும் சிற்பங்கள், கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் செலவில் 5 இடங் களில் வைக்கப்பட்டது. ஸ்டெர்லிங் அவென்யூவில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், அடையாறு சர்தார் படேல் சாலையில் புலி ஆட்டம் கலை சிற்பம் ரூ.3 லட்சத்திலும் இன்று திறந்து வைத்துள்ளேன்.

பெரம்பூர் மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போது அங்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார். இவ்வாறு துணை முதல்வர் மு..ஸ்டாலின் கூறினார்.

Last Updated on Monday, 01 February 2010 10:09