Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் மார்க்கெட், கடைகள் ஏலம்

Print PDF

தினமணி 26.02.2010

சேலம் மாநகராட்சியில் மார்க்கெட், கடைகள் ஏலம்

சேலம், பிப்.25: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டன.

மாநகராட்சியில் உள்ள பஸ் நிலையக் கடைகள், நாளங்காடிகள், பூங்காக்கள், காய்கறி மார்க்கெட்டுகள், சைக்கிள் நிறுத்தங்கள் உள்ளிட்ட 38 இனங்களுக்குக்கு ஆண்டுதோறும் பொது ஏலம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட 13 இனங்களுக்கு உதவி ஆணையர் நெப்போலியன் தலைமையிலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 3 இனங்களுக்கு உதவி செயற்பொறியாளர் அசோகன் தலைமையிலும் பொது ஏலம் நடைபெற்றது.

இதேபோல் கொண்டலாம்பட்டியில் உள்ள 9 இனங்களுக்கும், அம்மாப்பேட்டையில் உள்ள 13 இனங்களுக்கும் உதவி ஆணையர் தங்கவேல் தலைமையில் ஏலம் நடந்தது. பொது ஏலத்தில் மாதம் மற்றும் ஆண்டு கட்டண வசூல் செய்வதற்கான இனங்களுக்கு ஏற்றவாறு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் கே.எஸ். பழனிசாமி மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். ஏலம் நடைபெறுவதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீஸ் உதவி ஆணையர் சந்திரமோகன் தலைமையில் டவுன் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Last Updated on Friday, 26 February 2010 09:00