Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதி

Print PDF

தினமணி 12.03.2010

ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதி

மதுரை, மார்ச் 11: ஆன்}லைன் மூலம் கட்டட வரைபட அனுமதியைப் பெறும் புதிய முறை மதுரை மாநகராட்சியில் வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் மேயர் கோ.தேன்மொழி, கமிஷனர் எஸ்.செபாஸ்டின் ஆகியோர் கணினியை இயக்கி ஆன்}லைன் புதிய முறையைத் தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆன்}லைன் முறை குறித்து மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் கூறியது:

மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மூலம் தற்போது கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மேலும் எளிமைப்படுத்தும் விதமாகவும், பொதுக்கள் அலைச்சல் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கட்டட வரைபட அனுமதி ஆன்}லைன் மூலம் பெறும் புதிய முறை மார்ச் 11 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் 6 மாதத்தில் ஆன்}லைன் மூலம் மட்டுமே கட்டட வரைபட அனுமதியை வழங்கும் முறை கடைப்பிடிக்கப்படும்.

ஆன்}லைன் மூலம் பெறுவதற்கான கணினி மென்பொருள் சென்னையைச் சேர்ந்த வின்சா நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சர்வே எண், தெருவின் பெயர், முகவரி, வரைபடக் கலர், தேதி, கட்டண விவரம் உள்ளிட்ட அனைத்தும் சட்டத்துக்குஉள்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் கட்டுப்பாட்டு விதிகளை சமர்ப்பிக்கப்பட்ட வரைபடத்துடன் ஒப்பிட்டு அவை உறுதி செய்யப்பட்டு, குறுகிய நேரத்தில் ஒப்புதலோ அல்லது மறுப்போ வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்போர் சரியான தகவல்கள் தந்தால்மட்டுமே வரைபட அனுமதி பெறும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் தொல்லை நீங்கும். சரியான தகவல்கள் இருக்கும்பட்சத்தில் விண்ணப்பித்த 3 தினங்களில் அனுமதி பெறலாம் என்றார். ஆன்}லைனில் வரைபட அனுமதி எவ்வாறு பெறுவது குறித்து சென்னையைச் சேர்ந்த வின்சா நிறுவன மேலாளர் சுரேஷ் செயல்முறை விளக்கம் அளித்தார்.

இதில் மண்டலத் தலைவர்கள் க.இசக்கிமுத்து, .மாணிக்கம், என்.நாகராஜன், குருசாமி,தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 March 2010 09:23