Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துரிதம்: விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் தீவிரம்

Print PDF

தினமலர் 17.03.2010

பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துரிதம்: விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் துவக்கப் பட்டது. இதற்காக 35.67 கோடி ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டு பரவலாக பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள 36 வார்டு சாலைகளிலும் பாதாள சாக்கடைத் திட் டத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளது. விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை குழாய் கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர் எருமணந் தாங்கல் ஏரியிலும், காகுப் பம் ஏரியிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சேகரிக்கப்படுகிறது. எருமணந்தாங்கல் ஏரியில் 4 கோடி ரூபாயிலும், காகுப்பம் ஏரியில் 9 கோடி ரூபாயிலும் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தை அடுத்துள்ள ரயில்வே காலனி, மகாராஜபுரம், சண்முகபுரம் காலனி உள் ளிட்ட பகுதிகளின் கழிவு நீர் எருமணந்தாங்கல் ஏரியிலும், மற்ற பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் காகுப்பம் ஏரியிலும் கொண்டு சேர்க்கப்படுகிறது. சேவியர் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பம்பிங் ஸ்டேஷன் மூலம் கழிவு நீர் காகுப்பம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. காகுப்பத்தில் அமைக் கப்படும் சுத்திகரிப்பு நிலையம் மூலம், கழிவு நீரில் உள்ள குப்பைக் கழிவுகள் அகற்றி நீர் சுத்தப்படுத்தப்பட்டு விவசாயப் பயன்பாட்டிற்காக வெளியேற்றப்பட உள்ளது. காகுப்பம் ஏரியில் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் 25 சதவீதம் முடிக்கப்பட் டுள்ளது.

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதால் நேரு வீதி, திருச்சி சென்னை நெடுஞ்சாலைத் தவிர்த்து மற்ற முக்கிய வீதிகளில் சாலைகள் சிதைந்து பள்ளங்களாக நீண்ட நாட்கள் காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்கள் அவதியடைந்து வருவதோடு, சாலைகளை சீரமைத்துக் கொடுப்பதோடு திட்டத் தினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக் கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மார்க்கெட் வீதிகளான எம்.ஜி.ரோடு, மராஜர் வீதிகளில் பணிகள் நடப்பதை துரிதப்படுத்திட வணிகர்கள் கோரிக்கை வைத்துள் ளனர். இதனையொட்டி திட்டப் பணிகளை விழுப் புரம் சேர்மன் ஜனகராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்.ஜி. ரோடு, காமராஜர் வீதிகளில் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், காகுப்பம் ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டடப் பணிகளை ஆய்வு செய் தார். ஆய்வின் போது நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், திட்ட மேலாளர் மதன், குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் கனகராஜ், பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

"அரசு இடத்தில் மட்டுமே திட்டம்': பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை பார்வையிட்ட சேர்மன் ஜனகராஜ் ருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏரியில் கட்டுமான பணிகளுக்கு இருந்த தடைகளை கோர்ட் மூலம் நிவர்த்தி செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டம் முழுவதும் அரசுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே நிறைவேற்றி வருகிறோம். வரும் அக்டோபர் மாதத்திற்குள் திட்டத் தினை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்திலேயே முடித்துக் கொடுக்க வேலைகளை துரிதப்படுத்தியுள்ளோம். இதற்காக நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சேர்மன் ஜனகராஜ் கூறினார்.

Last Updated on Wednesday, 17 March 2010 07:21