Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சூலூரில் ரூ.40 லட்சம் செலவில் பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 24.03.2010

சூலூரில் ரூ.40 லட்சம் செலவில் பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

சூலூர்: சூலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. சூலூர் பேரூராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படுகி றது. இந்த கட்டடம் 80 ஆண்டுகள் பழமை வாய்ந் தது. தலைவர், செயல் அலுவலர் அறை, பதிவுரு அறை, வரி வசூல் மையம், மனுக்கள் பெறும் வரவேற்பு பிரிவு ஆகியன இந்த கட்டடத்தில் செயல் பட்டு வந்தது. புதிய கட்டடம் கட்ட பேரூராட்சி மன்றம் தீர்மானித்தது. இரண்டு திட்டத்தில் மாநில அரசின் நிதியுதவி பெற்று, பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட முடிவானது. 40 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய அலுவலக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. மாநில அரசின் சிறப்பு நிதியுதவியில் 20 லட்சம் ரூபாய் மற்றும் பேரூராட்சி பொது நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகம் அமைக்கப் படும். இப்பணிக்காக, தற்போதுள்ள கட்டடம் இடித்து அகற்றப்படும். தலைவர் அறை, செயல் அலுவலர் அறைகள் அருகேயுள்ள கூட்டுறவு வங்கி கட்டடத்துக்கும், அலுவலர்கள் அறை, பேரூராட்சி கூட்ட அரங்கம் அமைந் துள்ள கட்டடத்துக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடம் இடித்து அகற்றும் பணிக்காக அதிலுள்ள பயன்படக்கூடிய பொருட்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. விரைவில் கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:35