Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 08.04.2010

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி

மதுரை, ஏப். 7: வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் தாற்காலிக பாலப் பணியை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அருள்மிகு மீனாட்சி } சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்குவதற்கு, மதுரை மாநகராட்சி சார்பில் தாற்காலிகப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வகிறது.

கோடைக் காலத்தை முன்னிட்டு வைகை அணையில் குறைந்த நீர்அளவு இருப்பதாலும், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும், மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொùண்டு 400 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் 80 குடிநீர் தொட்டிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

நடமாடும் நவீன கழிப்பறை வாகனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்படும் என்றார்.

முன்னதாக, டி.வி.எஸ். நகர் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் வரும் ஏப்ரல் 10}ம் தேதி மூடப்படவுள்ளதால், டி.வி.எஸ். நகருக்கு செல்வதற்கான மாற்றுப் பாதையாக மேயர் முத்து பாலத்தின் கீழ் மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் சர்வீஸ் சாலையை ஆணையர் பார்வையிட்டார்.

அப்போது, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி ஆணையர் (வருவாய்) இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:37