Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கவுண்டம்பாளையத்தில் தீம்பார்க் அமைக்க கல்விக்குழு பரிந்துரை

Print PDF

தினமணி 16.04.2010

கவுண்டம்பாளையத்தில் தீம்பார்க் அமைக்க கல்விக்குழு பரிந்துரை

கோவை, ஏப். 15: கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் "தீம்பார்க்' அமைக்க கல்விக்குழு பரிந்துரைத்துள்ளது.

÷கோவை மாநகராட்சி கல்விக்குழுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

÷இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

÷வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும். கவுண்டம்பாளையம் அருகே கே.கே.புதூர் குப்பை கிடங்கில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 18 ஏக்கரில் "தீம்பார்க்' அமைக்க வேண்டும்.

÷ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேனிலைப் பள்ளியில் உள்ள கால்பந்து மைதானத்தை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த வேண்டும். ஒக்கிலியர் காலனி மேனிலைப் பள்ளியில் மீன் மார்க்கெட்டுக்காக கட்டப்பட்டு உபயோகமற்று கிடக்கும் கட்டடத்தில் தேவையான மாறுதல் செய்து மாணவ மாணவிகளுக்கான கலையரங்கம் அமைக்க வேண்டும். 1 முதல் 5}ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க மாநகராட்சி சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

÷கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.கே.செந்தில்குமார், ஷோபனா செல்வன், நா.தமிழ்ச்செல்வி, கே.செல்வராஜ், கல்வி அலுவலர் மோகனசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.