Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ2.73 கோடியில் தெரு விளக்குகள்

Print PDF

தினகரன்         23.10.2013

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ2.73 கோடியில் தெரு விளக்குகள்

திருவொற்றியூர்,: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 3வது வார்டு மற்றும் 11 முதல் 14 வரையிலான வார்டுகளில் ழீ2 கோடியே 73 லட்சத்து 10 ஆயிரம் செலவில் சோடியம் மற்றும் எல்ஈடி தெரு மின்விளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டது.

இதன் திறப்பு விழா திருவொற்றியூர் தியாகராய புரத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார். எம்எல்ஏ குப்பன் வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மின்விளக்குகளை இயக்கி துவக்கி வைத்தனர்.

 

ரூ12 கோடியில் சாலை, கால்வாய் அமைச்சர் திறப்பு

Print PDF

தினகரன்         23.10.2013

ரூ12 கோடியில் சாலை, கால்வாய் அமைச்சர் திறப்பு

துரைப்பாக்கம்,: சென்னை மாநகராட்சி 194வது வார்டில் 13 சாலை, 10 நடைபாதை, 6 மழைநீர் கால்வாய், 189 தெரு விளக்குகள் பணி ழீ12 கோடியே 77 லட்சம் செலவில் முடிந்துள்ளது. இதன் தொடக்கவிழா, மேட்டுக்குப்பத்தில் நேற்று நடந்தது.

கவுன்சிலர் எம்.எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். அமைச்சர் சின்னையா தொடங்கி வைத்தார். மேயர் துரைசாமி, எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், மண்டல குழு தலைவர்கள் ராஜாராம், சுந்தரம், நிலை குழு தலைவர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.2¾ கோடியில் மின்விளக்குகள் அமைப்பு மேயர் சைதைதுரைசாமி தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           23.10.2013

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.2¾ கோடியில் மின்விளக்குகள் அமைப்பு மேயர் சைதைதுரைசாமி தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட தாங்கல் தியாகராயநகர், கணக்கர்தெரு, அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.78 கோடி செலவில் புதிதாக 1098 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் நடைபெற்றது. மண்டல குழுதலைவர் மு.தனரமேஷ் முன்னிலை வகித்தார்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு மின்விளக்குகளை தொடங்கி வைத்தனர். விழாவில் மாவட்டப் பொருளாளர் பத்மநாபன், நகரப் பொருளாளர் அம்பிகைதாஸ், ஜெயலலிதா பேரவை செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், தலைவர் சிவில் முருகேசன், கவுன்சிலர்கள் ஆர்.வி.தன்ராஜ், சூரியபாபு, அமுல்ராஜ். சின்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 39 of 238