Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சோழிங்கநல்லூரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.379 கோடி ஒதுக்கீடு ஜெயலலிதா உத்தரவு

Print PDF

தினத்தந்தி            21.10.2013

சோழிங்கநல்லூரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.379 கோடி ஒதுக்கீடு ஜெயலலிதா உத்தரவு

சோழிங்கநல்லூரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ.379 கோடி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நவீன தொழில் நுட்பம்

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான உறைவிடத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுவசதித் திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இதன்படி, கட்டிட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் ‘நீராற்றுதல்’ செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும்.

ரூ.380 கோடி ஒப்புதல்

கட்டுமான பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் எந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.

முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும், இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குவிலையில்லா மிதிவண்டிகள்

Print PDF

தினமணி           15.10.2013

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குவிலையில்லா மிதிவண்டிகள்

மதுரை மாநகராட்சி மாசாத்தியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈவெரா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா  நடைபெற்றது.

இவ்விழாக்களில், ஈவெரா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 766 பேருக்கும், கம்பர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 78 பேருக்கும், சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 85 பேருக்கும், அவ்வை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 132 பேருக்கும், கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 123 பேருக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 155 பேருக்கும், மாசாத்தியார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 105 பேருக்கும், பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 72 பேருக்கும் ஆக மொத்தமாக 1,416 மாணவ, மாணவியருக்கு மேயர் விவி ராஜன்செல்லப்பா விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தலைமை வகித்தார். மண்டலத்தலைவர் பெ.சாலைமுத்து, உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள், கல்விக்குழுத் தலைவர் சுகந்தி அசோக், சுகாதாரக்குழுத் தலைவர் முனியாண்டி, கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரைவேல், மாமன்ற உறுப்பினர் கருப்பையா,  தலைமை ஆசிரியைகள் விஜயலட்சுமி, கண்ணம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

குப்பைகள் சேகரிக்க ரூ. 33 லட்சத்தில் வாகனம்

Print PDF

தினமலர்             09.10.2013

குப்பைகள் சேகரிக்க ரூ. 33 லட்சத்தில் வாகனம்

புதுச்சேரி:உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரித்து, பாதுகாப்பாக அகற்ற, 33 லட்சம் ரூபாய் செலவில் காம்பாக்டர் வாகனம் மற்றும் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டது.

குப்பை அள்ளும் வாகன செயல்பாட்டை, அஜிஸ் நகரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட இந்த காம்பாக்டர் வாகனம், கோரிமேட்டிலிருந்து திண்டிவனம் சாலை வழியே ராஜிவ் காந்தி சதுக்கம் வரையும், மேட்டுப்பாளையம் பிப்டிக் பகுதியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக ராஜிவ் காந்தி சதுக்கம், காமராஜ் சாலை, சாரம் வரையிலும் ராஜிவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை. இந்திராகாந்தி சதுக்கம் முதல் வில்லியனூர் மெயின்ரோடு வழியாக அரும்பார்த்தபுரம் வரை சென்று குப்பைகளை சேகரிக்கும்.

துவக்க விழா நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் அழகிரி, செயற்பொறியாளர் குணசேகரன் கலந்து கொண்டனர்.

 


Page 41 of 238